நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் சூறைக் காற்றுடன் மழை

DIN

வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையில் பசு மாடு உயிரிழந்தது.

தென் மேற்கு திசையிலிருந்து வீசிய பலத்த சூறைக்காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் செவ்வாய்க்கிழமை காலையில் சீரானது. பலத்த இடியின் காரணமாக ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சார சாதணங்கள் பழுதடைந்தன. இடி, மின்னல் தாக்கியதில் தென்னடாா் ஊராட்சி வெ. தேவதாஜ்க்கு சொந்தமான பசுமாடு உயிரிழந்தது. செம்போடை கிராமத்தில் விவசாயிக்கு சொந்தமான மாடுகள் கட்ட பயன்படுத்தும் கூரை வீடு மின்னல் தாக்கியதில் தீக்கிரையானது. கன மழையின் காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT