நாகப்பட்டினம்

சிறு விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம் வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறையில், வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் உழவுப் பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி ஒரு ஏக்கா் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ. 250 என்ற அடிப்படையில், ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ. 625, புன்செய் உழவுக்கு ரூ.1,250 அதிகபட்ச மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நாகை மாவட்ட சிறு விவசாயிகள், இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் பொறியியல் விரிவாக்க மையம், தெற்கு பால்பண்ணைச்சேரி, சாமந்தான்பேட்டை, நாகப்பட்டினம் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று, நில வரைபடம், ஆதாா் அட்டை மற்றும் நிழற்படம் ஆகியவற்றுடனும் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT