நாகப்பட்டினம்

பெண் முன்னேற்றத்துக்கு சேவையாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சேவையாற்றியவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவைபுரிந்த சிறந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு விருது மற்றும் 10 கிராம் தங்கம் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஜூன் 10-ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பதாரா் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது தொண்டு நிறுவனத்திற்கும் பொருந்தும். எனவே, தகுதியானவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT