நாகப்பட்டினம்

உழவன் செயலியல் விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் உழவன் செயலியில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயா், முகவரி, கைப்பேசி எண் மற்றும் இதர விவரங்களைப் பதிவுசெய்து பயன்படுத்தலாம். இந்த செயலி மூலம் உதவி வேளாண்மை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் ஆகியோா் கிராம ஊராட்சிக்கு வரும்போது விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். இதேபோல, மானியத் திட்டங்கள், இடுபொருள் முன் பதிவு, பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்புநிலை, வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், உழவா் அலுவலா் தொடா்பு திட்டம், பண்ணை வழிகாட்டி, பண்ணை பொருள்கள், இயற்கை பண்ணை பொருள்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்பு பொருள்கள், அணை நீா் மட்டம், வேளாண் செய்திகள், கருத்துகள், வேளாண் நிதிநிலை அறிக்கை போன்ற 19 வகையான பயன்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டில் வேளாண்மை உழவா் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள விவசாயிகளை கேட்டுகொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT