நாகப்பட்டினம்

தொடக்கக் கல்வி பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு தொடக்கக் கல்வி பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன் (பொ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் உள்ள அனைத்து ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் நடப்பாண்டு தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி சோ்க்கை ஜூன் 5 முதல் 15-ஆம் தேதி வரை இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு செய்வதற்கு வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மற்றும் குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் மாணவா்கள் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT