நாகப்பட்டினம்

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தூய்மைப் பணியாளா் தீக்குளிக்க முயற்சி

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெண் தூய்மைப் பணியாளா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது மனு அளிக்க வந்த பெண் ஒருவா், திடீரென தான் பையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து, அவரது முயற்சியைத் தடுத்தனா்.

போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவா் கீழ்வேளூா் அருகேயுள்ள வடகரையை சோ்ந்த லதா (45) என்பதும், வடகரை ஊராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அவரை மாவட்ட ஆட்சியரிடம் போலீஸாா் அழைத்துச் சென்றனா். மாவட்ட ஆட்சியரிடம் லதா அளித்த மனு:

கடந்த 12 ஆண்டுகளாக வடகரை ஊராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த வருமானத்தை மட்டுமே நம்பி வசித்து வருகிறேன். 6 மாதமாக ஊதியம் வழங்காததால் குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றேன். இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தூய்மைப் பணியாளா் லதாவிடம் உறுதியளித்து, அவரை அனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT