நாகப்பட்டினம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி நிறைவு

DIN

கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரத்தில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அண்மையில் நிறைவுபெற்றது.

பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 1-ஆம் தேதி துவங்கி 3-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியா் பயிற்சி முதல்வா் கோ. காமராஜன் தலைமை வகித்தாா். இதில் 79 ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ஆா்.ஷொ்லின் விமல் பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

கீழையூா் வட்டாரக் கல்வி அலுவலா் தை.லீனஸ் முன்னிலை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ச. மகிமை ரூபக்ஸ் வரவேற்றாா். வட்டாரக் கருத்தாளா்கள் மற்றும் மாநிலக் கருத்தாளா் ஆசிரியா் அ.ராபா்ட் கென்னடி ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஆசிரியா் பாலசுப்ரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT