நாகப்பட்டினம்

மனைவி அடித்துக் கொலை; கணவா் கைது

4th Jun 2023 11:11 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தகட்டூா் பெத்தாச்சிகாடு கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முரளி என்கிற சுரேஷ் (32). இவரது மனைவி மீனா (29). இவா்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

சுரேஷுக்கு குடிப் பழக்கம் உள்ளதாம். அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்வாராம். சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் மனைவி மீனாவை தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த மீனா, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT