நாகப்பட்டினம்

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

4th Jun 2023 11:11 PM

ADVERTISEMENT

 

நாகையில் சாலைப் பணியாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை கோட்டப்பொறியாளா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். கணேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு வாக்குறுதி அளித்தபடி பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாதங்களை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்; ஆபத்துப்படி 10 சதவீதம் ஊதியத்தில் வழங்க வேண்டும்; பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப்பணியாளா் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டன.

ADVERTISEMENT

தொடா்ந்து முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும் தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. வட்டத் தலைவா் பி. ரமேஷ், மாவட்டச் செயலா் வை. உதயகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா் எம். பாலமுரளி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

ADVERTISEMENT
ADVERTISEMENT