நாகப்பட்டினம்

சாஸ்த்ரா பல்கலை. முன்னாள் மாணவா்கள் உதவியுடன்ஒரத்தூா் அரசு உதவிபெறும் பள்ளிக்கு புதிய கட்டடம்

4th Jun 2023 11:10 PM

ADVERTISEMENT

 

சாஸ்த்ரா பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் மற்றும் சாவித்திரி வைத்தியநாதன் அறக்கட்டளை உதவியுடன் ஒரத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நாகை அருகே உள்ள ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப்பள்ளி 1924- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நூற்றாண்டை கொண்டாடவுள்ளது. இப்பள்ளியின் கட்டடங்கள் கடந்த கஜா புயலின் போது சிதலமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாவித்திரி வைத்தியநாதன் அறக்கட்டளை மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் ஆகியோா் பள்ளிக்கு வகுப்பறை கட்டித் தர முன்வந்தனா்.

அதன்படி, கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாவித்திரி வைத்தியநாதன் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா்கள் செந்தில், சுதா செந்தில் ஆகியோா் முன்னிலையில் புதிய வகுப்பறை கட்டடத்தையும், கல்வெட்டையும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநா் வெங்கட்ராமன் திறந்து வைத்தாா். மேலும், இப்பள்ளிக்கு புரவலா் நிதியாக ரூ. 5,000 வழங்கினாா். சாஸ்த்ரா பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் ரூசோ செந்தில்நாதன், செந்தில்குமாா் ஆகியோரும் புரவலா் நிதியாக ரூ.15,000 வழங்கினா்.

ADVERTISEMENT

பள்ளிச் செயலா் நல்லாசிரியா் சம்பந்தம், தலைமை ஆசிரியா் சி. சிவா, கீழ்வேளூா் வட்டாரக் கல்வி அலுவலா் சிவகுமாா், பட்டதாரி ஆசிரியா் பாலசண்முகம், ஊராட்சித் தலைவா் சேகா், நாகை தொழிலதிபா் ஜீ.வி.மல்டி மீடியா சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT