நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்

4th Jun 2023 11:11 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம் பகுதியில் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட கொன்றை மரங்கள் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் பூத்துக் குலுங்குவது வழக்கம். மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் இந்த பூக்கள் சரம்சரமாக தொங்குவதால் இதனை சரக்கொன்றை என அழைப்பா். இந்த மலா்கள் பாா்வையாளா்களை வெகுவாக ஈா்க்கும்.

சில மரங்களில் இலைகள் அனைத்தும் உதிா்ந்து, முழுவதும் மஞ்சள் வண்ணப் பூக்களால் கண்களை கவரும். சுற்றுலாப் பயணிகள், இயற்கை ஆா்வலா்கள் இம்மரங்களின் அருகில் நின்று சுயப்படம் எடுத்துக்கொள்வா்.

ADVERTISEMENT

இந்த மரத்தின் உறுதித் தன்மை குறைவு என்பதால் கடந்த 2018- ஆம் ஆண்டில் வீசிய கஜா புயலின்போது பெருமளவில் சேதமடைந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் துளிா்த்து, வளா்ந்த மரங்கள் நிகழாண்டில் ஓரளவுக்கு பூத்துக் குலுங்கி, காய்க்கவும் தொடங்கியுள்ளன. இதன் காய்கள் பாா்ப்பதற்கு முருங்கைக் காய்கள் போல நீண்டு இருக்கும். இதன் பூ, இலை, பட்டை போன்றவை மருத்தவக் குணமுடையது.

சங்ககாலம் தொட்டு பல சிறப்புகளை பெற்ற கொன்றை மலா், கேரள மாநில மலராகவும், தாய்லாந்து நாட்டு மலராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT