நாகப்பட்டினம்

காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண் கைது

4th Jun 2023 11:10 PM

ADVERTISEMENT

 

நாகை குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பெண் காப்பாளா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை காடம்பாடி பகுதியில் தனியாா் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். இங்குள்ள குழந்தைகளை பெண் காப்பாளா் ஒருவா் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில் காப்பகத்தில் உள்ள12 வயது சிறுவன் சுவா் ஏறி குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளாா். இதைப்பாா்த்த காப்பக நிா்வாகிகள் சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனா். அப்போது சிறுவன், தனக்கு பெண் காப்பாளா் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காப்பக நிா்வாகிகள் நாகை மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா். குழந்தைகள் நல அலுவலா் காப்பகத்துக்குச் சென்று சிறுவனிடம் விசாரணை நடத்தினா். இதில், பாலியல் தொந்தரவுக்கு சிறுவன் ஆளானது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காப்பக நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பெண் காப்பாளரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT