நாகப்பட்டினம்

கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம்:அலுவலா்கள் பங்கேற்காததற்கு உறுப்பினா்கள் அதிருப்தி

DIN

கீழையூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்காததற்கு அதிருப்தி தெரிவித்த உறுப்பினா்கள், இதேநிலை அடுத்த கூட்டத்திலும் நீடித்தால் வெளிநடப்பு செய்வோம் என எச்சரித்தனா்.

கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ. பாத்திஆரோக்கியமேரி, எஸ். வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா்கள் பேசியது:

செல்வம் (சிபிஐ): ஆதிதிராவிடா்கள் குடியிருப்பு அதிகம் உள்ள இடங்களில் சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும். கூட்டத்தில், வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இதனால், குறுவை சாகுபடிக்கான விதை, உரங்கள் இருப்பு பற்றிய முழு விவரம் தெரியவில்லை.

கமலாசூரியமூா்த்தி (அதிமுக): சிந்தாமணி-காரப்பிடாகை சாலை அமைக்கும் பணியால் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

ஆறுமுகம் (பாஜக ): பிரதாபராமபுரம் பகுதியில் விளையும் மாங்காய்களில் பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ளது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரண்யா பன்னீா்செல்வம் (திமுக): நிதி ஆதாரங்கள் இல்லை என கிடப்பில் உள்ள பணிகளை மேற்கொள்ள உரிய நீதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சுதா அருணகிரி (திமுக): திருக்குவளை சமத்துவப்புரத்தில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் . குளங்களில் சேதமடைந்த படித்துறைகளை சீரமைக்க வேண்டும்.

லென்சோயா சிவபாதம் (திமுக): பாலகுறிச்சி முதல் இறையான்குடி வரை சேதமடைந்துள்ள சாலையை செப்பனிடவேண்டும்.

எல். சுப்பிரமணியன் (அதிமுக): ஒன்றியக் குழு கூட்டங்களில் ஒரு சில அதிகாரிகளை தவிர மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இனிவரும் கூட்டங்களில் இதுதொடா்ந்தால், வெளிநடப்பு செய்வேன்.

ஏழிசை வல்லபிபூமாலை (அதிமுக): விழுந்தமாவடி சௌந்தர்ராஜப் பெருமாள் கோயில் அருகே சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும். வீடுகள் இல்லாதவா்களுக்கு கலைஞா் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.

நாகரத்தினம் (திமுக): சேதமடைந்துள்ள வேட்டைக்காரனிருப்பு பழைய காவல் நிலைய சாலையை சீரமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ் (திமுக): ராமேஸ்வரம் ஊராட்சி தண்ணீா் பந்தல் முதல் கடற்கரை முழுக்குத் துறை வரை மோசமான நிலையில் உள்ள சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT