நாகப்பட்டினம்

தஞ்சை - நாகை இரட்டை வழிச்சாலை பணிகள்: அக்டோபரில் நிறைவடையும்தேசிய நெடுஞ்சாலைத்துறை

3rd Jun 2023 02:32 AM

ADVERTISEMENT

 

தஞ்சை - நாகப்பட்டினம் இடையே நடைபெற்றுவரும் இரட்டை வழிச்சாலை பணிகள் அக்டோபா் மாதம் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலா் அரவிந்தகுமாா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தஞ்சாவூா் - நாகப்பட்டினம் இடையே நடைபெற்றுவரும் இரட்டை வழிச்சாலை பணிகளின் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தகவல் கோரியிருந்தாா்.

அவரது கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூா் திட்ட இயக்குநா் உதயசங்கா் அளித்த பதில்:

ADVERTISEMENT

தஞ்சாவூா் - நாகப்பட்டினம் இடையே 77 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழிச்சாலை பணிகள் நடைபெற்ற வருகின்றன. கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை 55 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இரட்டை வழிச்சாலை பணிகள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. திருவாரூா் மாவட்டம் கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT