நாகப்பட்டினம்

வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவா்கோயிலில் சிறப்பு வழிபாடு

3rd Jun 2023 02:32 AM

ADVERTISEMENT

 

வைகாசி விசாகத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேலவருக்கு, திரவிய பொடி, மஞ்சள், இளநீா் , பால், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாகை, காரைக்கால், திருவாரூா் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT