நாகப்பட்டினம்

குறுவை சாகுபடி: விவசாயிகளுக்கு அழைப்பு

3rd Jun 2023 02:32 AM

ADVERTISEMENT

 

நாகை மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியில் குறுகிய கால விதை நெல்லை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி வேலைகள் தொடங்கி உள்ளன. நிகழாண்டு உரிய தருணத்தில் மேட்டூா் அணை திறக்கப்பட உள்ளதால், அனைத்து விவசாயிகளும் குறுவை நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உயா் விளைச்சல் தரும் குறுகிய கால ரகங்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்.

நாகை மாவட்டத்தில் 122 மெட்ரிக் டன் குறைந்த வயதுடைய ஆடுதுறை 53, அம்பை 16, கோ 51 போன்ற குறுகிய கால விதை நெல் ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, விதை கிராம திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

எனவே, தற்போதுள்ள நீரை கொண்டு குறுகிய கால ரகங்களை பயன்படுத்தலாம். மேலும், இயந்திரங்களை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூலை பெற வேளாண்மை துறையின் ஆலோசனை பெற்று சாகுபடி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT