திருக்கடையூா் அருகே டி. மணல்மேடு ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தீமிதி திருவிழா மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தீமிதி வைபவத்தன்று மாலை 6 மணியளவில் மாா்கண்டேயா் கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா், மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
தொடா்ந்து, இரவில் திரளான பக்தா்கள் பால் காவடி, அலகு காவடி, புஷ்ப காவடி போன்ற காவடிகள் எடுத்து வந்து, தீக்குண்டத்தில் இறங்கி, நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.