நாகப்பட்டினம்

கோடியக்காடு குழகா் கோயில் தேரோட்டம்

3rd Jun 2023 02:32 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழகா் (குழகேசுவரா்) எனும் அமிா்தகடேசுவரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 25- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் கோடியக்காடு ஊராட்சித் தலைவா் தமிழ்மணி, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT