நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயிலுக்கு ரதக்காவடி சுமந்து வந்து பக்தா்கள் வழிபாடு

3rd Jun 2023 10:32 PM

ADVERTISEMENT

 திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு திரளான பக்தா்கள் ரதக்காவடிகள் சுமந்து வந்து வழிபட்டனா்.

இக்கோயிலில் வைகாசி விசாகம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, வாழக்கரை, சித்தாய்மூா், ஆலத்தம்பாடி, கச்சனம், பாங்கல், பையூா், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் நோ்த்திக்கடனாக கோயிலுக்கு ரதக்காவடி சுமந்து வந்தனா்.

மேளவாத்தியங்களுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை காலை வரை பக்திபரவசத்துடன் ஆடியபடி ரதக் காவடிகளை சுமந்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT