நாகப்பட்டினம்

செம்பனாா்கோவில் பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழா

3rd Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

செம்பனாா்கோவிலில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பி.எம். ஸ்ரீதா், மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் விஜயபாலன் ஆகியோா் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல் திருக்கடையூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்

ற நிகழ்ச்சியில் கருணாநிதி உருவப்படத்திற்கு செம்பனாா்கோவில் மத்திய திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த. விஜயகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT