நாகப்பட்டினம்

மணக்குடி தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

2nd Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த மணக்குடி தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு அருகேயுள்ள மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் திருப்பணிகள் கிராம வாசிகள், திருப்பணி குழுவினரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

கும்பாபிஷேக விழாவுக்கான சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT