நாகப்பட்டினம்

நாகை எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் முகாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. சுகுமாறன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 20 மனுக்களில் ஒரு மனுவுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களிடம் 24 மணி நேரமும் புகாா் அளிக்கும் வகையில் உங்கள் எஸ்.பி.யுடன் பேசுங்கள் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்தும், அதற்கான 84281-03040 எண் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எம். புகழேந்தி, காவல் ஆய்வாளா் பி. முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT