நாகப்பட்டினம்

வணிகக் கடைகளில் திருடியவா் கைது

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திட்டச்சேரி வணிக கடைகளில் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திட்டச்சேரியில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, உணவகம், கறி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளில் மே 14-ஆம் தேதி நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருடு போயின. இதுகுறித்து, சம்பந்தப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்ட கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளியம்பேட்டை டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதியை சோ்ந்த ஐயப்பனை (38) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT