நாகப்பட்டினம்

திருக்குவளை ஜமாபந்தி இன்று நிறைவு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைகிறது.

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலா் வீ.ஷகிலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதல் நாள் பொதுமக்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து 10 பயனாளிகளுக்கு 3.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 145 மனுக்கள் பெறப்பட்டன. இரண்டு நாட்களில் மொத்தமாக 207 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ஜி.ராஜ்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT