நாகப்பட்டினம்

திருக்குவளையில் சூறைக்காற்றுடன் மழை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளையில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை மழை பெய்தது.

வெயில் வானிலை சுட்டெரித்து வந்த நிலையில், மே 29-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. எனினும், வெயில் வானிலை அதிகமாக புதன்கிழமை உணரப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளான திருவாய்மூா், எட்டுக்குடி, கொளப்பாடு, வலிவலம், சாட்டியக்குடி பகுதிகளில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு, லேசான சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT