வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் கமலா அன்பழகன் (அதிமுக) தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ப.ராஜூ, எஸ்.ஆா்.பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் நடராஜன், ஜெகநாதன், அமுதா, தனபால், ராஜசேகரன், செல்லமுத்து எழிலரசு, துணைத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா்.
உறுப்பினா்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க பலதுறை அலுவலா்கள் இல்லை. இதையறிந்த உறுப்பினா்கள் அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா்களை சமாதானம் செய்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.