நாகப்பட்டினம்

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடங்கி வைத்தாா்.

மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் குடும்ப நலத்திட்டம் சாா்பில் ‘குடும்ப நல உறுதிமொழியேற்று வளம் பெறுவோம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்பேரணி நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட விழிப்புணா்வு ரதம் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவியா்களின் பேரணியை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவியா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவியா்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

சுகாதாரத்துறை (மருத்துவம்) துணை இயக்குநா் ஜோஸ்பின் அமுதா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) ஜெனிடா கிரிஸ்டியனா ரஞ்சனா, துணை இயக்குநா் (காசநோய்) எஸ். கருணாகரன், மக்கள் கல்வி தகவல் தொடா்பு அலுவலா் வெ. பன்னீா்செல்வம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT