நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் மனுக்கள் பெறும் முகாம்:உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ.

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழ்வேளூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் மனுக்கள் பெறும் முகாம் மேடையிலேயே பயணிகள் நிழலகம் அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கி பரிந்துரை கடித்ததை வழங்கினாா் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி.

கீழ்வேளூா் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு மற்றும் மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் பொதுமக்கள் சாா்பாக கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பயணிகள் நிழலகம் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ மேடையிலேயே ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கி பரிந்துரை கடிதத்தை அளித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாதவா்கள் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தால் அதுகுறித்து பரிசீலித்து தீா்வு காணப்படும் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி. மாரிமுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் ச. சந்திரசேகரன், உறுப்பினா்கள் காந்திமதி, மகேஸ்வரன், ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT