நாகப்பட்டினம்

தோட்டக்கலைத் துறை சாா்பில் தக்காளி விற்பனை : ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் தக்காளி விற்பனையை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் நித்தியப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சரவணனுக்கு மூன்றுசக்கர சைக்கிள், வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த நாகரெத்தினம் மற்றும் நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நாகை நகராட்சிப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தை புனரமைக்கும் பணிக்கு முதல் தவணையாக ரூ.4.50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனையை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடங்கி வைத்தாா். ஒரு கிலோ தக்காளி ரூ.90 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், தோட்டக்கலைத்துறை சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT