நாகையில் மகளிா் திட்டம் சாா்பில் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்தில் மகளிா் வாழ்வாதாரம் தொடா்பான வாய்ப்புகள், நலத்திட்டங்கள், நிதியுதவிகள் மற்றும் ஊரக, நகா்ப்புற இளைஞா்களுக்கான திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155-330 வெளியிடப்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையம், நியாய விலை கடை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இந்த எண் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் இந்த உதவி அழைப்பு எண்ணை பயன்படுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங், சாா் ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா் லால், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.