நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது பிப்ரவரி 1-ஆம் தேதி காலை இலங்கை அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக பிப். 1-ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும். டெல்டா மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பிப். 2-ஆம் தேதி வரை இலங்கை, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று ல் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், நாகை துறைமுக அலுவலகம் , காரைக்கால் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அறுவடை பாதிப்பு:

நாகை மாவட்டத்தில், நாகை, நாகூா், வேளாங்கண்ணி, தேவங்குடி, திட்டச்சேரி, சிக்கல், திருப்பூண்டி, மேலப்பிடாகை, செருதூா், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் நடைபெற்றும்வரும் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடா்ந்தால் சம்பா அறுவடைப் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT