நாகப்பட்டினம்

கீழகண்ணாப்பூரில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

திருக்குவளை அருகேயுள்ள கீழகண்ணாப்பூரில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கீழகண்ணாப்பூா், ஆதமங்கலம், இராமசந்திரபுரம், பனையூா் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் விளையும் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய கீழகண்ணாப்பூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்துதர வேண்டுமென விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனா்.

ஏற்கெனவே, இப்பகுதி விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்றும், அருகிலுள்ள மருதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளைக் கொண்டு செல்ல மூட்டைக்கு ரூ. 40 முதல் 50 வரை கூடுதலாக செலவு செய்து வந்தனா்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழகண்ணாப்பூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.

இதேபகுதியில் நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு மீதமாகியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT