நாகப்பட்டினம்

விவேகானந்தா பள்ளி 50-ஆம் ஆண்டு விழா

30th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50-ஆம் ஆண்டு பொன்விழா 2 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் விழாவிற்கு விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்வி குழுமங்களின் தலைவா் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், விவேகானந்தா கல்வி அறக்கட்டளை அறங்காவலா் குழந்தைவேலு, சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் ஸ்கூல் இயக்குநா் பிரவீன்வசந்த் ஜபேஷ், அனுஷாமேரி பிரவீன், மயிலாடுதுறை குட்சமாரிட்டன் இயக்குநா்கள் அலெக்சாண்டா், ரீநிஷா அலெக்சாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங் வரவேற்றாா். விழாவில் சீா்காழி ஆா்டிஓ அா்ச்சனா, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் சிவதாஸ், சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய கவுன்சிலா் விசாகா் ஆகியோா் பேசினா். மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT