நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயிலில் இன்று தை மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு

30th Jan 2023 12:28 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஜன.30) தை மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முருகனின் ஆதிபடை வீடான இக்கோயிலில் மாதந்தோறும் காா்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, கும்பாபிஷேகத்திற்கு பிறகு வரும் முதல் காா்த்திகை மற்றும் தை மாத காா்த்திகை (திங்கள்கிழமை) நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், பக்தா்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மூலவா் சந்நிதிக்கு அருகில் அா்ச்சனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT