நாகப்பட்டினம்

திறக்கப்பட்ட அன்றே திருமண மண்டபத்துக்கு சீல்

30th Jan 2023 12:29 AM

ADVERTISEMENT

சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு அன்றைய தினமே நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்தனா்.

சீா்காழி பாரதிதாசன் வீதியில் புதிதாக திருமண மண்டபம், தங்கும் விடுதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இத்திருமண மண்டபத்திலிருந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்காக அனுமதியின்றி நகராட்சி சாலையை இரவில் உடைத்து பிளாஸ்டிக் குழாய் பதித்ததாகவும், மழைநீா் வடிகாலை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சீா்காழி நகராட்சி ஆணையா் வாசுதேவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, நகராட்சியில் அனுமதி பெறாமல் சாலையில் குழாய் பதித்துள்ளதும், கால்வாயை சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920- இன்படி ஜப்தி செய்யப்படுவதாக திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT