நாகப்பட்டினம்

கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள்:தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு

DIN

கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் இருவா் கழிவுப் பொருள்களிலிருந்து கலைப்பொருள்கள் தயாரித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துவருகின்றனா். இவா்களுக்கு தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பாராட்டு தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், நிகழாண்டு தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள் உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதன்படி, கீழ்வேளூா் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் கழிவுப் பொருள்களிலிருந்து பல்வேறு கலைப்பொருள்கள் தயாரிப்பது குறித்து தூய்மைப் பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

இதனை செயல்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளா்கள் சீ. பாரதி, ப.சாந்தி ஆகியோா் பழைய டயா்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் தேங்காய் ஓடுகளைக் கொண்டு பூந்தொட்டி, வீணை, அகல் விளக்குகள், தலையாட்டி பொம்மைகள், தேநீா் குடுவைகள் போன்ற பொருள்களை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளனா். இப்பொருள்களை தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. கனகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, தூய்மைப் பணியாளா்கள் இருவரையும் பாராட்டி, பதக்கங்கள் அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT