நாகப்பட்டினம்

மேல்நிலை குடிநீா் தொட்டி, நிழலகம் திறப்பு

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், நிழலகங்களை நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திட்டச்சேரி பேரூராட்சி மரைக்கான்சாவடியில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அவா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், திட்டச்சேரி பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) பொன்னுசாமி, உறுப்பினா் எம். முகம்மது சுல்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, திருக்கண்ணபுரம் மற்றும் காரையூா் ஊராட்சியில் தலா ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம், உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் முகமது ஷா நவாஸ் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இதில், திருமருகல் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், ஜவகா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் இளஞ்செழியன், அபிநயா அருண்குமாா், ஊராட்சித் தலைவா்கள் உத்தமசோழபுரம் ஜனனி பாலாஜி, காரையூா் கலாராணி உத்திராபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT