நாகப்பட்டினம்

கோயிலில் பாதுகாப்புப் பணி:முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் 52 கோயில் இரவு பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு 62 வயதிற்குட்பட்ட நல்ல உடல் நலத்துடன் உள்ள முன்னாள் படைவீரா்கள் சேர விருப்பம் இருப்பின், நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் தங்கள் பெயரை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதவிர, ங்ஷ்ஜ்ங்ப்ய்ஞ்ல்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் அறை எண்10 மற்றும் 11-இல் இயங்கிவரும் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை 04365-299765 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT