நாகப்பட்டினம்

தேத்தாகுடி அரசுப் பள்ளி ஐம்பெரும் விழா

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா, புரவலா்களுக்கு பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் இள.தொல்காப்பியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரத்னம், பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் பி. சண்முகம், ஆா்.வி. கல்லூரி செயலாளா் ஆா்.வி. செந்தில், அரசுக் கல்லூரி பேராசிரியா் ப.பிரபாகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராசேந்திரன், சாந்தி ஆனந்தராசு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

மனிதவள மேம்பாட்டு பயிற்றுநா் நாகை வீ. ராஜராஜன் ‘கதைகளின் வழியே கற்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். சொக்கலிங்க கவுண்டா் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் கடந்த ஆண்டில் பிளஸ் 2, 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT