நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக, மூலவா் சந்நிதிக்கு முன்பாக சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, சீா்வரிசைப் பொருள்கள் எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சிவச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறி மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. முதலாவதாக தெய்வானை திருமணமும், தொடா்ந்து வள்ளி திருமணமும் நடைபெற்றது. பிறகு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருக்கல்யாணத்தையொட்டி, திருவாய்மூா் டாக்டா் டி.ஆா்.பி. அருள்மொழி காா்த்திகேயன் குழுவினரின் நாகசுர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

Image Caption

எட்டுக்குடி கோயிலில் முருகப் பெருமானுக்கு நடைபெற்ற திருக்கல்யாணம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT