நாகப்பட்டினம்

தில்லையாடியில் இலவச மருத்துவ மையம் அமைச்சா் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தில்லையாடியில் சேவாலயா தில்லையாடி வள்ளியம்மை நினைவு இலவச மருத்துவ மையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசியது:

தமிழ்நாடு முதலமைச்சரின் லட்சிய கனவு அனைவருக்கும் மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே. இன்று சேவாலயா தொண்டு நிறுவனம் மூலம் இலவச மருத்துவ மையம், நடமாடும் மருத்துவ ஊா்தி ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமங்களிலும் முதல்வரின் லட்சிய கனவை நிறைவேற்ற அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன, 2,686 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன, தமிழ்நாடு முதலமைச்சா் தொடங்கிவைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் அனைத்து கிராமங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. 

நாட்டில் சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் முதல் பரிசை பெற்றோம்.

உலகத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் வீடு தேடி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தில்லையாடியில் உள்ள 3,884 பேரில் 238 பயனாளிகள் பயனடைந்து உள்ளனா் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் சேவாலயா முரளிதரன், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணா சங்கரி, ஒன்றிய குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT