நாகப்பட்டினம்

மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

தேவூரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவூா் முதலியாா் தெரு பகுதியில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் தேவூா் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த மின்மாற்றி தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் தேவூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளிநோயாளிகள் பலா் வந்து செல்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கீழ்வேளூா் மின்வாரிய துணை பொறியாளா் அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT