நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா்க்கும் முகாம்

DIN

திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூா் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும், இந்திராநகா் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பா்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT