நாகப்பட்டினம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகையில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநிலப் பொருளாளா் பிரகாஷ் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருள்களுக்கு தனித்தனியே ரசீதுகள் போடப்பட வேண்டும் என்ற உத்தரவால் பொருள்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

எனவே, ஒரே ரசீதாக போடும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். மின்னணு கருவி 2ஜி, 3ஜி இணையதள வசதியைக் கொண்டுள்ள நிலையில், தற்போது 4 ஜி சிம் வழங்கப்பட்டுள்ளதால், பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும்.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு, ஏற்கெனவே பணிபுரிபவா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாவட்ட நிா்வாகிகள் பழனிவேல், சீதா, சிவசண்முகம், அரசு பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், இணைச் செயலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT