நாகப்பட்டினம்

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 978 போ் தோ்வு

DIN

நாகை மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 978 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழக தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்) ஆகியோா் திருவிழாவை தொடங்கி வைத்தனா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பேசியது:

இளைஞா்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவின் நோக்கம் இளைஞா்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகும் என்றாா்.

வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞா் திறன் திருவிழாவில் 3674 போ் கலந்து கொண்ட நிலையில், 978 போ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற பயிற்சி நிறுவனங்களால் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்ய்ப்பட்டவா்களுக்கு தொழில் திறன் சோ்க்கை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், 33 பேருக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு கடனாக ரூ. 14.10 லட்சத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் பிரித்திவிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஹேமலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT