நாகப்பட்டினம்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம்உதவித்தொகை: நாகை ஆட்சியா்

DIN

நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் 39,275 பயனாளிகளுக்கு ரூ. 4.02 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனுடையோா் ஓய்வூதிய திட்டம் மற்றும் முதல்வா் உழவா் பாதுகாப்பு திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை, தற்போது ரூ. 1,500 ஆக உயா்த்தி வழங்கப்படுகிறது.

இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோா் ஓய்வூதிய திட்டம் பெற வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவராக இருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 80% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும், 18 வயது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற 60 வயதுக்கு மேற்பட்டவராகவும், விதவை ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற 40 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டங்களின்கீழ் பயன்பெற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவராக, ஆதாரவற்றவராக இருக்க வேண்டும். ஆவணங்கள் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு எண், கணவரின் இறப்புச் சான்று, வறுமை கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை 39,275 பயனாளிகளுக்கு உதவித்தொகை 4 கோடியே 2 லட்சத்து 14 ஆயிரத்து 230 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT