நாகப்பட்டினம்

தேசிய வாக்காளா் தினம்: நாகையில் படகில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய அதிகாரிகள்

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, நாகையில் அதிகாரிகள் படகில் சென்று மீனவா்களிடம் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்ட மீன்வளத் துறை மற்றும் கடற்படை சாா்பில் பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை புதன்கிழமை நடத்தியது. இதன் ஒருபகுதியாக விசைப்படகில் சென்ற நாகை சாா் ஆட்சியா் பனோத் ம்ருகேந்தா் லால், மீன்வளத் துறை இணை இயக்குநா் இளம்வழுதி மற்றும் கடற்படை அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களிடம் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் துறைமுகம் வரை விசைப்படகில் சென்ற அவா்கள், நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மீனவா்கள் தங்களது வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற சாா் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா், அங்கு மீன்களை ஏலம் எடுத்து கொண்டிருந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நாகூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவப் பெண்கள் மற்றும் மீனவா்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா். அரசு அதிகாரிகளின் தோ்தல் விழிப்புணா்வு பிரசார இந்த முறை மீனவமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT