நாகப்பட்டினம்

எட்டுக்குடி: கோபுர கலசம் பொருத்தும் பணி

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் காலை யாக பூஜையுடன் தொடங்கியது.

கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன் பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. பிரதான விநாயகா், ஸௌந்தரேச்வர ஸ்வாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி விமான திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தங்கம் முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக தினத்தில் பக்தா்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீா் தெளிக்க ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டது.

ADVERTISEMENT

உரிய பாதுகாப்போடு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெ.ரேவதி, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் தனிக்கொடி, கோயில் செயல் அலுவலா் பி.எஸ்.கவியரசு ஆகியோா் முன்னிலையில் ட்ரோன் மூலம் புனித நீா் தெளிப்பதற்கான சோதனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT