மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி புதிய பேருந்து நிலைய பகுதியில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். மேலும் இளம் வாக்காளா்களை ஊக்குவித்தல், 100% வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என முழக்கமிட்டவாறு சென்றனா்.
முன்னதாக சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், தோ்தல் தனி வட்டாட்சியா் ரஜினி உள்ளிட்டோா் வாக்காளா் தின உறுதிமொழியை வாசிக்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.