வேதாரண்யம் நகராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், நகராட்சி ஆணையா் ஹேமலதா முன்னிலை வகித்தாா். விழாவையொட்டி தெற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று கோலங்களை ஆய்வு செய்து பாராட்டினாா். நகராட்சி அளவிலாள மகளிா் குழுக்கள் பங்கேற்ற பாட்டுப் போட்டி, இசை நாற்காலி, கும்மியடித்தல் போன்ற கலைப் போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற சமத்துவப் பொங்கலில் இந்து, இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என மும்மதத்தினரும் பங்கேற்றனா்.